உள்ளூர் செய்திகள்
கிணற்றில் குதித்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தற்கொலை
- 4மாதங்களுக்கு முன்பு கிருத்திகா தனது வீட்டின் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார்.
- மன–வேதனை அடைந்த கிருத்திகா சம்பவத்தன்று வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே மருபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருத்திகா (வயது20). இவர் கோனேரிப்பள்ளியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 4மாதங்களுக்கு முன்பு கிருத்திகா தனது வீட்டின் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார்.
இதற்காக அவர் மருத்துவ–மனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு சரிவர குணமாக–வில்லை. இதன்காரணமாக மன–வேதனை அடைந்த கிருத்திகா சம்பவத்தன்று வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகின்றனர்.