உள்ளூர் செய்திகள்

பாவூர்சத்திரத்தில் விபத்தில் என்ஜினீயர் பலி: நான்குவழிச்சாலை பணியில் அலட்சியத்தால் விபத்துக்கள் அதிகரிப்பு- சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

Published On 2023-07-25 14:28 IST   |   Update On 2023-07-25 14:28:00 IST
  • ராஜேஷ்குமார் மோட்டார் சைக்கிளில் தென்காசியில் இருந்து பாவூர்சத்திரம் நோக்கி வந்துள்ளார்.
  • எதிரே வந்த மினி லோடு ஆட்டோ மோதி ராஜேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்காசி:

பாவூர்சத்திரம் அருகே உள்ள பொடி யனூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் ராஜேஷ்குமார்(வயது 20). என்ஜினீயரிங் பட்டதாரி.

இவர் நேற்று தென்காசியில் இருந்து பாவூர்சத்திரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். பாவூர் சத்திரம் அருகே ராமச்சந்திரபட்டினம் பகுதியில் வந்தபோது முன்னால் சென்ற காரை முந்தி செல்ல அவர் முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த மினி லோடு ஆட்டோ மோதி ராஜேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் போதிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளாததே விபத்துகள் அதிகம் ஏற்படுவதற்கு காரணம் எனவும், நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து செல்வதால் வாகன ஓட்டிகள் பெரிதும் குழப்பம் அடைந்து விபத்து ஏற்பட்டு விடுகிறது எனவும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.

நேற்று ராஜேஷ் குமார் விபத்தில் இறந்ததற்கும் ராமச்சந்திரபட்டணம் விளக்கு அருகே நான்கு வழிச்சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவித்து சென்றது தான் காரணம். லோடு ஆட்டோவானது நான்கு வழிச்சாலையில் இடதுபுறம் உள்ள சாலையில் சென்றிருந்தால் நேற்றைய விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரி வித்துள்ளனர். எனவே உரிய பாதுகாப்பு உபகரணங்களை பயன் படுத்தாமல் அலட்சியமாக பணி புரிந்து வரும் நான்கு வழிச்சாலை ஒப்பந்ததாரர்கள் மீதும், அதனை கண்டு கொள்ளாத அரசு அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News