உள்ளூர் செய்திகள்

ரெட்டியார்பட்டி சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

Published On 2023-03-30 13:22 IST   |   Update On 2023-03-30 13:22:00 IST
  • சாலை ஆக்கிரமிப்பு காரணமாக ஆம்புலன்ஸ்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது
  • ரெட்டியார் பட்டி சந்தை சனிக்கிழமை தோறும் இயங்கி வருகிறது.

தென்காசி:

வீ.கே. புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட ரெட்டியார்பட்டி கிராமத்தில் உள்ள முக்கிய சாலைகள் எங்கும் ஆக்கிரமிப்புகள் அதிகம் காணப்படுவதால் அவ்வழியே மருத்துவமனை செல்லும் ஆம்புலன்ஸ்கள் சாலைகளை கடந்து செல்ல மிகுந்த சிரமம் அடைந்து வருகிறது. மேலும் கடையநல்லூர், சுரண்டை பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் அவசர தேவைகளுக்கு நெல்லை செல்வதற்கு இந்த ரெட்டியார்பட்டி சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

மாலை நேரங்களில் ரெட்டியார்பட்டி பிரதான சாலை ஓரங்களில் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் அணி வகுத்து நிற்பதால் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. வாரத்தில் இறுதிநாளான சனிக்கிழமை தோறும் ரெட்டியார் பட்டி சந்தை இயங்கி வருகிறது.

சந்தை இயங்கும் நாட்களில் சாலைகளில் ஒரு சில வியாபாரிகள் மிகப்பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் நடத்தி வருவதால் அன்றைய நாட்களிலும் போக்குவரத்து நெருக்கடி தொடர்வதாகவும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு ரெட்டியார்பட்டியில் சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டுள்ள கடைகள், கட்டிட ங்களை ஆய்வு செய்து அதன் மீது நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News