தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த சிராஜ்பூர் குடியிருப்போர் நல சங்கத்தினர்.
சிராஜ்பூர் நகருக்கு சொந்தமான பூங்காக்களில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்
- பூங்காக்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
- பூங்காக்களில் காவல்துறை பாதுகாப்போடு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சாவூா்:
தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித்திடம், சிராஜ்பூர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் அதன் தலைவர் செந்தில் தலைமையில் நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் அமைந்துள்ள சிராஜ்பூர் நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்த நகரில் அமைந்துள்ள அமரன் பூங்கா, மைமூன் பூங்கா, ஷேக்நூர் பூங்கா ஆகிய பூங்காக்களில் ஆக்கிரமிப்பதற்காக போடப்பட்டிருந்த கயிறு மட்டும் கம்புகளை அகற்றி சுத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
40 அடி சாலையின் தெற்கு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
எனவே தடை உத்தரவை விலக்கி சிராஜ்பூர் நகருக்கு சொந்தமான பூங்காக்களை சுத்தம் செய்து காவல்துறை பாதுகாப்போடு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.