உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு வழிப்பாட்டில் ஈடுபட்டனர்.

கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி

Published On 2023-04-09 14:15 IST   |   Update On 2023-04-09 14:15:00 IST
  • பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்துக் கொண்டனர்.
  • மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னைத் திருத்தலத்தில், ஈஸ்டர் சிறப்பு திருப்பலி பூஜைகள் நடைபெற்றது.

திருத்தலத்தின் பங்குத்தந்தை இசையாஸ் திருப்பலி பூஜைகளை நிறைவேற்றி வைத்தார்.

இதன் முன்னதாக, அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் இருந்து மூன்றாவது நாள் இயேசு உயிர்த்தெழும் நிகழ்வு ஒளி வெள்ளத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, இயோசுவை வரவேற்கும் வகையில் அனைவரும் கைகளிலும் மெழுகுவர்த்தி ஏந்தி, சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இந்த சிறப்பு திருப்பலியின் போது, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்துக் கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து ெகாண்டு வழிபட்டனர்.

இதேபோல் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

Similar News