உள்ளூர் செய்திகள்
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
- இணைப்பு பெறுவதில் தாமதம் உள்ளிட்ட குறைகளை புகார்களாக தெரிவித்தனர்.
- முகாமில் பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளர் ரத்தினகுமார், மற்றும் அதிகாரிகள், மின் நுகர்வோர் கலந்து கொண்டனர்.
பல்லடம் :
பல்லடம் கோட்ட மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம் பல்லடம் - உடுமலைரோட்டில் உள்ள மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜவகர் தலைமையில் நடைபெற்றது. இதில் மின் நுகர்வோர் கலந்து கொண்டு மின் இணைப்புகளில் விநியோக குறைபாடு, இணைப்பு பெறுவதில் தாமதம் உள்ளிட்ட குறைகளை புகார்களாக தெரிவித்தனர்.இந்த முகாமில் பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளர் ரத்தினகுமார், மற்றும் அதிகாரிகள், மின் நுகர்வோர் கலந்து கொண்டனர்.