- உலகின் எந்த நாட்டு அதிபரை வேண்டும் என்றாலும் கூப்பிடட்டும்..
- நரி வலம் போனால் என்ன.. இடம் போனால் என்ன.. எங்களை கடிக்காமல் இருந்தால் சரி..
தமிழக சட்டசபையில் கவர்னருக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது அமைச்சர் துரைமுருகன் 'ஏதோ கவர்னர் எதிர்ப்பு தீர்மானம் என்று தகவல் வந்ததும் எதிர்கட்சிகள் துள்ளி குதித்து இது பஞ்சமா பாதகம் என்பதுபோல சொன்னார்கள். பேசுகிறபோது, 'நீங்கள் சட்டமன்ற விதிகளை எல்லாம் தளர்த்தி அல்லவா கொண்டு வருகிறீர்கள்?' என்று கேட்டனர்.
அவர்கள் மாநாடு நடத்திக் கொள்ளட்டும். யாரை வேண்டும் என்றாலும் கூப்பிடட்டும். அமெரிக்க அதிபரை கூப்பிடட்டும். இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை கூப்பிடட்டும். உலகின் எந்த நாட்டு அதிபரை வேண்டும் என்றாலும் கூப்பிடட்டும்.. நரி வலம் போனால் என்ன.. இடம் போனால் என்ன.. எங்களை கடிக்காமல் இருந்தால் சரி..
சட்டமன்ற விதிகளை தளர்த்துவது எப்படி என்பதை கற்றுக் கொடுத்ததே அவர்கள்தான். இதே சட்டமன்ற விதிகளை தளர்த்திதான் சென்னா ரெட்டி மீது பாய்ந்தார்கள். அதே சட்டமன்ற விதிகளை நாம் தளர்த்தும் போது பத்தினிகள் ஆகிவிட்டார்கள். சரி அவர்கள் போகட்டும்" என்று குறிப்பிட்டார் துரைமுருகன்.
இவர்கள் இப்படி அவர்கள் மீது குறை சொல்வதும், அவர்கள் இவர்கள் மீது குறை சொல்வதும் தமிழக அரசியலில் வாடிக்கையாகிவிட்டது. அதனால்தான் படிக்காத மேதை காமராஜர் வேடிக்கையாக 'இரு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்' என்று சொல்லி சென்றாரோ?