உள்ளூர் செய்திகள்
விருத்தாசலத்தில்கடன் தொல்லையால்/.. வாலிபர் தற்கொலை.
- . இவர் குடும்ப செலவுகளுக்காக பல்வேறு நிறுவனங்களில் இருந்து கடன் வாங்கி இருந்தார்.
- ட்டில் தனிமையில் இருந்த தமிழ்செல்வன் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
கடலூர்:
விருத்தாசலம் அருகே பரவலூர் கல்லரகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது26). இவர் குடும்ப செலவுகளுக்காக பல்வேறு நிறுவனங்களில் இருந்து கடன் வாங்கி இருந்தார்.
கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாத நிலையில் தமிழ்செல்வன் மனம் உடைந்து காணப்பட்டுள்ளார்.நேற்று வீட்டில் தனிமையில் இருந்த தமிழ்செல்வன் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இறந்த தமிழ்ச்செல்வனுக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.