உள்ளூர் செய்திகள்

வளத்தாமங்களம் பகுதி கொள்முதல் நிலையம் முன்பு மூடி வைக்கப்பட்டுள்ள நெல் மணிகள்.

தொடர்மழையால் நெல் கொள்முதல் பணிகள் மந்தம்

Published On 2022-09-01 09:43 GMT   |   Update On 2022-09-01 09:43 GMT
  • சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் குறுவை முன்பருவத்தில் நடவு செய்த நெற்பயிர்கள் அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
  • தொடர்மழை காரணமாக வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் அறுவடை பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மெலட்டூர் :

மெலட்டூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர்ந்து கனமழைபெய்து வருவதால் குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு வருவதுடன் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல்நிலையங்கள் உடனடியாக விற்பனை செய்யமுடியாமல் வாரக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம், மெலட்டூர், திருக்கருகாவூர், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் குறுவை முன்பருவத்தில் நடவு செய்த நெற்பயிர்கள் அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தொடர்மழை காரணமாக வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் அறுவடை பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல்நிலையத்தில் விற்பனைக்கு கொட்டி வைத்துள்ள நிலையில் தொடர் மழையின் காரணமாக நெல்கொள்முதல் செய்யும் பணி மந்த நிலையில் உள்ளதால் கொள்முதல் நிலையங்களில் அதிகளவில் நெல் தேக்கமடைந்துள்ளது.

அதனால் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் உரிய நேரத்தில் விற்க முடியாமல் கொள்முதல் நிலையங்களில் வார கணக்கில் விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மழை நீடித்தால் குறுவை பருவத்தில் சாகுபடி செய்த நெற்பயிர்களை அறுவடை செய்யவும் முடியாமல், அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்யவும் முடியாத நிலை ஏற்பட்டு குறுவை சாகுபடி விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உருவாகும் என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News