உள்ளூர் செய்திகள்

கம்புகுத்தி கவுண்டன்குளம் கரை உடைந்து தண்ணீர் வீணாகி செல்வதை படத்தில் காணலாம்.

குஜிலியம்பாறையில் கனமழையால் குளம் உடைந்து வீணாகி செல்லும் தண்ணீர்

Published On 2022-11-16 12:50 IST   |   Update On 2022-11-16 12:50:00 IST
  • குளம் உடைந்தால் அருகில் உள்ள வெள்ளச்சிகவுண்டன்குளமும் உடைந்து தண்ணீர் வெளியேறும் நிலை உள்ளது.
  • போர்க்கால நடவடிக்கையாக குளத்தின் கரைப்பகுதியை பலப்படுத்த வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகில் உள்ள பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கம்புகுத்தியூரில் பாசனகுளம் உள்ளது. கம்புகுத்திகவுண்டன் குளம் எனப்படும் இந்த குளம் 15ஏக்கர் பரப்பளவு கொண்டது. ராமகிரி, தளிப்பட்டி ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் இந்த குளத்தில் வந்துசேர்கிறது. கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் பெய்த கனமழையால் குளம் முழுகொள்ளளவை எட்டியது.

இதனால் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி செல்லாமல் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தாசில்தாருக்கு கோரிக்கை விடுத்தனர். இதனைதொடர்ந்து பாளையம் பேரூராட்சி சார்பில் குளத்தின் மறுகால் பகுதியில் குறைந்த அளவு மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து சென்றனர். ஆனால் அதன்பிறகு கொட்டிதீர்த்த கனமழையின் காரணமாக மணல்மூடைகள் அடித்து செல்லப்பட்டு தண்ணீர் வீணாகி செல்கிறது.

இந்த குளம் உடைந்தால் அருகில் உள்ள வெள்ளச்சிகவுண்டன்குளமும் உடைந்து தண்ணீர் வெளியேறும் நிலை உள்ளது. மேலும் இப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கும் மழைநீர் செல்லும் அபாயம் உள்ளது.

எனவே போர்க்கால நடவடிக்கையாக குளத்தின் கரைப்பகுதியை பலப்படுத்த வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் குளம் உடைந்து தண்ணீர் வந்துவிடுேமா என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

Tags:    

Similar News