உள்ளூர் செய்திகள்

மில் நிர்வாகிகளுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.

வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க டி.எஸ்.பி. அறிவுரை

Published On 2022-08-06 07:22 GMT   |   Update On 2022-08-06 07:22 GMT
  • திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், கூம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மில்கள் உள்ளன.
  • மில் நிர்வாகி களிடம் வடமாநில தொழி லாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.

வேடசந்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், கூம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மில்கள் உள்ளன. இங்கு வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் புரோக்கர்கள் மூலம் அழைத்து வரப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ள–னர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்ல மறுத்த 2 வட மாநில பெண்களை புரோக்கர் அறையில் பூட்டி சித்ரவதை செய்தார். இதனைத் தொடர்ந்து வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் இளம்பெண்க ளை மீட்டு அவர்களுக்கு உணவு வழங்கி பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் ஒரு தம்பதியை மில் வேலைக்கு அழைத்து வந்து கோழிப்பண்ணையில் பணியமர்த்தியதால் அவர்கள் வேலைக்கு செல்ல மறுத்தனர். இதனால் புரோக்கர் அந்த பெண்ணை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேடசந்தூருக்கு டி.எஸ்.பி. துர்காதேவி புதிதாக பதவியேற்றுள்ளார். அவர் வடமாநில தொழிலாளர்கள் புரோக்கர்களிடம் சிக்கி அவதிப்படுவதை அறிந்து மில் நிர்வாகிகளுடன் ஆலோ சனை கூட்டம் நடத்தினார்.

இதில் சப்-இன்ஸ்பெ க்டர்கள் பாண்டியன், வேல்ராஜ், வேல்மணி, ஆகியோர் மில் நிர்வாகி களிடம் வடமாநில தொழி லாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினர்.

Tags:    

Similar News