டிராவல்ஸ் பஸ்சில் போதைப்பொருள் கடத்தல்:கைதான தேனி டிரைவர்கள் உள்பட 4 பேர் சேலம் சிறையில் அடைப்பு
- தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி செல்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
- சேலம் மாவட்ட போலீசாரும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ய தீவிர வாகன சோதனை, ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருப்பூர்:
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி செல்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். அதன்படி சேலம் மாவட்ட போலீசாரும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ய தீவிர வாகன சோதனை, ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பெங்க ளூருவில் இருந்து தேனி மாவட்டம் கம்பம் செல்லும் தனியார் சொகுசு பஸ்சில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வருவதாக நேற்று கருப்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சேலம் அருகே கருப்பூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்ட னர்.அப்போது சுங்கச்சா வடிக்கு வந்து நின்ற தனியார் சொகுசு பஸ்சில் ஏறி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில் பஸ்சின் பின் வரிசையில் உள்ள சீட்டுக்கு அடியில் ஒரு மூட்டை யில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து குட்கா மூட்டையை போலீசார் பறி முதல் செய்தனர். கடத்தப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ.20 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து பஸ் டிரைவர்கள் தேனி சின்னமனூர் நடுத்தெ ருவை சேர்ந்த முத்துகி ருஷ்ணன் (வயது 40), வெள்ளையன் தெருவை சேர்ந்த செந்தில் (46), கிளீனர் முருகன் ஆகியோரை போலீ சார் கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பெங்க ளூரில் பெயர் தெரியாத ஒரு நபர் ஆயிரம் ரூபாய் கொடுத்து மூட்டையை ஏற்றி விட்டதாகவும், தேனியில் உள்ள ஆஷிக் என்பவரி டம் கொடுக்கும்படி தொலை பேசி எண்ணை மட்டும் கொடுத்துள்ளார் என்ற விபரத்தினை தெரிவித்தனர்.
இதையடுத்து தேனிக்கு விரைந்த போலீசார் அங்கு பஸ்சில் போதைப்பொருட் களை வாங்க தயாராக நின்ற ஆஷிக்கை யும் கைது செய்த னர். கைதான 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி னர். இதை யடுத்து 4 பேரும் கோர்ட்டில் அஜர்படுத்தப்பட்டு சேலம்சிறையில் அடைக்கப்பட்டனர்.