உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணியை இன்ஸ்பெக்டர் மணிமாறன் தொடங்கி வைத்தார்.

போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

Published On 2022-09-20 09:07 GMT   |   Update On 2022-09-20 09:07 GMT
  • போதை பழக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராக மாணவ -மாணவிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.
  • துண்டு பிரசுரங்களை வழங்கி சீர்காழி முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றனர்.

சீர்காழி:

சீர்காழி காவல்துறை மற்றும் எல். எம். சி.மேல்நிலைப் பள்ளி சார்பில் உலக போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

சீர்காழி எம்எம்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ரூபிசாந்தக்குமாரி தலைமை வகித்தார்.

பள்ளியின் தேசிய மாணவர் படை அலுவலர் கிருபாகரன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விஜய்அமிர்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் கலந்து கொண்டு போதை பழக்கங்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் போதை பழக்கங்களுக்கு எதிராக மாணவ -மாணவிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என விளக்கி கூறினார்.

பின்னர் மாணவ-மாணவிகள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அதனை தொடர்ந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை இன்ஸ்பெக்டர் மணிமாறன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் மாணவ- மாணவிகள் போதை பழக்கங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் சீர்காழி முக்கிய வீதிகள் வழியே பேரணியாக சென்றனர்.

இந்த பேரணியில் தேசிய மாணவர் படை, சாரண-சாரணியர் இயக்கம், நாட்டு நலப்பணி திட்டம், இளஞ்செஞ்சிலுவை அமைப்பு மற்றும் திரளான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் இளம்செஞ்சிலுவை அலுவலர் ஜோகன்னா நன்றிக கூறினார்.

Tags:    

Similar News