திருநாவலூர் அருகே 9-ம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற டிரைவர் கைது.
கள்ளக்குறிச்சி:
திருநாவலூர், பிப்.9-ககள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா நன்னவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 42). விவசாயி. இவரது 14 வயது மகள் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 18-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் புகார் அளித்தார். புகாரின் பேரில் காணமல் போன 9-ம் வகுப்பு மாணவியை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இதில் அதே ஊரில் செங்கல் சூளையில் டிரைவராக பணியாற்றிய நடையன் (21) என்பவர் மாணவியிடம் ஆசை வார்த்தைக் கூறி கடத்தி சென்றது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து டிரைவர் நடையனை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் செங்கல்பட்டு பகுதியில் பணி செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவருடன் அந்த மாணவியை தங்க வைத்திருப்பதும் தெரியவந்தது.தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் செங்கல்பட்டு அருகேயிருந்த செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டிருந்த டிரைவர் நடையனை போக்சோ சட்டடத்தின் கீழ்கைது செய்தனர். உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 9-ம் வகுப்பு மாணவியை மீட்டு விழுப்புரம் அரசு காப்பகத்திற்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.