பேரிஜம் ஏரி (கோப்பு படம்)
சோத்துப்பாறை அணை வறண்டது பேரிஜம் ஏரியில் இருந்து பெரியகுளத்திற்கு குடிநீர் வழங்க நடவடிக்கை
- பேரிஜம் ஏரியில் இருந்து வரும் நீரை வராக நதியின் குறுக்கே சோத்துப்பாறை அணையில் தேக்கி பெரியகுளம் பகுதி குடிநீர் மற்றும் பாசனதேவைக்காக வினியோகிக்கப்பட்டு வருகிறது.
- பெரியகுளம் நகரா ட்சிக்கு மட்டுமின்றி சோத்து ப்பாறை கூட்டுகுடிநீர் திட்டத்தை நம்பியுள்ள 17 பேரூராட்சிகள், 3 ஊராட்சிகளிலும் குடிநீர் பிரச்சினை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்
பெரியகுளம்:
கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் இருந்து வரும் நீரை வராக நதியின் குறுக்கே சோத்துப்பாறை அணையில் தேக்கி தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதி குடிநீர் மற்றும் பாசனதேவைக்காக வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் பெரிய குளம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் குடிநீருக்காக மட்டும் 3 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. மழை இல்லாததால் 126.28 அடி உயரம் உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது.
தற்போது அணையின் நீர்மட்டம் 9.84 அடியாக உள்ளது. பிப்ரவரி முதல் வாரம் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தது. மீன்பிடிக்க அனுமதி இல்லாத போதும் சிலர் அதிகாரிகளின் துணையோடு தொடர்ந்து விநாடிக்கு 25 கனஅடி வீதம் மார்ச் முதல்வாரம் வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டு மீன்பிடித்து விற்பனைக்கு அனுப்பி வந்தனர். அப்போது மீன்கள் எடை அதிகரிக்க இறைச்சி கழிவுகள், காய்கறி கழிவுகளை அணைநீரில் கொட்டி நீரையும் மாசுபடுத்தினர்.
மீன்பிடிக்க வசதியாக தண்ணீரை படிப்படியாக வெளியேற்றியதால் நீர்மட்டம் குறைய தொடங்கியது. அந்த சமயத்தில் பேரிஜம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்திருக்க வேண்டும். ஆனால் அப்போது தண்ணீர் திறந்தால் மீன்பிடிக்க சிரமம் ஏற்படும் எனக்கருதி தண்ணீரை வரவிடாமல் தவிர்த்து விட்டனர். தேனி மாவட்டத்திலேயே கோடை காலத்திலும் வறட்சி இல்லாத நகராட்சியாக பெரியகுளம் இருந்து வந்தது.
ஆனால் தற்போது நகராட்சிக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனால் பேரிஜம் ஏரியில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 36 மணிநேரத்தில் சோத்துப்பாறை அணைக்கு வந்துவிடும். அதன்பிறகு நாளை முதல் பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு ள்ளது.
பெரியகுளம் நகரா ட்சிக்கு மட்டுமின்றி சோத்து ப்பாறை கூட்டுகுடிநீர் திட்டத்தை நம்பியுள்ள 17 பேரூராட்சிகள், 3 ஊராட்சிகளிலும் குடிநீர் பிரச்சினை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.