உள்ளூர் செய்திகள்

பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சியையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி

Published On 2023-01-25 09:53 GMT   |   Update On 2023-01-25 09:53 GMT
  • மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
  • பிரதமர் மோடி எழுதிய 'எக்ஸாம் வாரியர்ஸ்' புத்தகமும் வழங்கப்பட்டன

உடுமலை :

நாடு முழுவதும் பள்ளிகளில் வரும் மாதங்களில் முழு ஆண்டு தேர்வு, பொதுத்தேர்வு நடக்கவுள்ளன. இதற்காக மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். பொதுவாக தேர்வு சமயங்களில் அவர்களுக்கு ஒரு வித அச்சம் எழுகிறது. இதை போக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இதன் வாயிலாக அவர்களுக்கு விழிப்புணர்வு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வகையில், மாணவர்களுக்கு தேர்வு பயத்தை போக்கும் வகையில் பிரதமர் மோடி நடத்தி வரும் பரீட்சா பே சர்ச்சா எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி வருகிற 27-ந்தேதி புது டெல்லியில் நடக்கிறது.

அதில் தேர்வுகள் குறித்து மாணவர்கள் கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க உள்ளார். அதன் ஒரு பகுதியாக தேசிய அளவில், 500 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.உடுமலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடந்த போட்டியில், 15 பள்ளிகளைச்சேர்ந்த, 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.அனைத்து மாணவர்களுக்கும் ஓவியம் வரைவதற்கான உபகரணங்கள் மட்டுமின்றி, பிரதமர் மோடி எழுதிய 'எக்ஸாம் வாரியர்ஸ்' புத்தகமும் வழங்கப்பட்டன. முடிவில் சிறந்த ஐந்து ஓவியங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News