உள்ளூர் செய்திகள்

 பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்ற காட்சி.

திரவுபதியம்மன் கோவில் தேர்திருவிழா

Published On 2023-09-07 15:46 IST   |   Update On 2023-09-07 15:46:00 IST
  • கடந்த மாதம் தொடங்கி வருகிற 8-ம் தேதி வரை நடைபெறுகிறது .
  • ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வணங்கி வழிபட்டனர்.

அரூர்,

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வேப்பம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள திரவுபதியம்மன் கோவிலில் 6-ஆம் ஆண்டு திருத்தேர் விழா நடைபெற்றது. இவ்விழாவானது கடந்த மாதம் தொடங்கி வருகிற 8-ம் தேதி வரை நடைபெறுகிறது . தேர் திருவிழாவை முன்னிட்டு மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார்கள் ஒன்று கூடி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல் ,கூழ் ஊற்றுதல், கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிறகு திரௌபதியம்மன் திரு தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்ட நிகழ்வில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வணங்கி வழிபட்டனர்.

தேர் திருவிழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படா மல் இருக்க போலீசார், தீயணைப்பு துறையினர் ,வருவாய்துறையினர், சுகாதாரத்துறையினர் மற்றும் மின்சார துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News