உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி பாரத் கல்வி நிறுவனங்கள் சார்பில் மருத்துவர் தின விழா

Published On 2023-07-03 14:57 IST   |   Update On 2023-07-03 14:57:00 IST
  • மருத்துவர்கள் கடவுளுக்கு நிகராக போற்றப்பட வேண்டியவர்கள்.
  • கொரோனா கால கட்டத்தில் தங்கள் குடும்பத்தை பிரிந்து மக்களுக்காக மகத்தான மருத்துவ சேவை செய்தவர்கள் என பாராட்டினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி பாரத் கல்வி நிறுவனங்கள் சார்பில் மருத்துவர் தின விழா கொண்டாடப்பட்டது.

இதற்கு பாரத் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மணி தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் பாரத் பள்ளியில் படித்து 400-க்கும மேற்பட்டவர்கள் டாக்டர்களாக உள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் பாரத் கல்வி நிறுவன மாணவ, மணாவிகள படித்து வருகிறார்கள்.

மருத்துவர்கள் கடவுளுக்கு நிகராக போற்றப்பட வேண்டியவர்கள். கொரோனா கால கட்டத்தில் தங்கள் குடும்பத்தை பிரிந்து மக்களுக்காக மகத்தான மருத்துவ சேவை செய்தவர்கள் என பாராட்டினார்.

பாரத் பள்ளியில் படித்து மருத்துவ கல்லூரியில் பேராசிரியைகளாக பணி புரிந்து வரும் டாக்டர்கள் சிந்து, அபிஷாந்தினி, கோகுல் ஆகியோர் சிறப்பு விருந்தினர் களாக கலந்து கொண்டனர்.

டாக்டர் அபிஷாந்தினி பேசுகையில் தான் படித்த போது 10-ம் வகுப்பு பொது தேர்வில் மாவட் டஅளவில் முதலிடம் பிடித்ததாகவும், பள்ளி நிர்வாகத்தினர் உறுதுணை யாக இருந்தாகவும் கூறினார்.

டாக்டர் சிந்து பேசுகையில் பல மருத்துவர்களை உருவாக்கிய இந்த பள்ளியில் நானும் படித்தேன் என்பதை கூறினார். டாக்டர் கோகுல் பேசும் போது மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி பேசினார்.

முடிவில் பாரத் கல்வி நிறுவனங்களின் செயலாளர் டாக்டர் சந்தோஷ், மருத்துவ படிப்பு படிக்க ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகள் எவ்வாறு தேர்வில் சவால்களை எதிர் கொண்டு மன உறுதியுடன் தயாராக இருக்க வேண்டும் என்று எடுத்து கூறினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவர்களுக்கு பூங்கொத்து, கேடயம் நினைவு பரிசாக வழங்கப் பட்டது.

இதற்கான ஏற்பாடு களை பாரத் மெட்ரிக் பள்ளி முதல்வர் விஜயகுமார், பாரத் சி.பி.எஸ்.இ. பள்ளியின் முதல்வர் ஹரிநாத் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News