மங்கலம்பேட்டையில் தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம் நடைபெற்றது.
மங்கலம்பேட்டையில் தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம்: இள.புகழேந்தி தொடக்கி வைத்தார்
- இதற்கு, தி.மு.க. நகர துணைச் செயலாளர் வக்கீல் பாரி இப்ராஹிம் முன்னிலை வகித்தார்.
- வழக்கறிஞர் இள.புகழேந்தி இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
கடலூர்:
கடலூர் மேற்கு மாவட்டம், விருத்தாசலம் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் சிறப்பு முகாம், விருத்தாசலம் ஒன்றியச் செயலாளர் வேல்முருகன் தலைமையில், விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை தேரடி வீதியில் நடந்தது இதற்கு, தி.மு.க. நகர துணைச் செயலாளர் வக்கீல் பாரி இப்ராஹிம் முன்னிலை வகித்தார். முன்னதாக, நகர செயலாளர் செல்வம் வரவேற்றார். கடலூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. தேர்தல் பொறுப்பாளருமான வழக்கறிஞர் இள.புகழேந்தி இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் சிறப்பு முகாமினை தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி வெங்கடாஜலபதி, ஒன்றிய துணை செயலாளர் முத்துவேல், நகர அவைத் தலைவர் முஹம்மது யூசுப், பொருளாளர் சேட்டு, ஒன்றிய பிரதிநிதி கோ.மணி, சோழப்பிரகாஷ், டைலர் நடராஜன், டைலர் கணேசன், ஜெயசக்தி, கண்ணன், இளைஞரணி விக்ரம், ராஜேஷ் உள்ளிட்ட வார்டு கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.