உள்ளூர் செய்திகள்
கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள்.
நிலக்கோட்டையில் தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
- நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க வாக்குச்சாவடி முகவர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- இதில் ஒன்றிய, பேரூர், கிளை செயலாளர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை,:
நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க வாக்குச்சாவடி முகவர் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட துணைச் செய லாளர்கள் நாகராஜன், பிலால் உசேன், மாவட்ட அவை தலைவர் காமாட்சி, மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, ஒன்றிய செயலாளர் மணிகண்டன் , சவுந்திர பாண்டியன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலக்கோட்டை பேரூர் செயலாளர் ஜோசப் கோவில் பிள்ளை வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆங்காங்கே பூத்கமிட்டி மற்றும் பல்வேறு அதற்கான செயலில் ஈடுபட வேண்டும் என்று ஆலோ சனை வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய, பேரூர், கிளை செயலாளர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.