உள்ளூர் செய்திகள்

ஓசூரில் தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம்: இந்தி திணிப்பை எதிர்த்து நடைபெறவுள்ள பொதுக்கூட்டம் குறித்து ஆலோசனை

Published On 2022-11-01 14:25 IST   |   Update On 2022-11-01 14:25:00 IST
  • ஓசூரில் தளி சாலையில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
  • இந்தி திணிப்பை எதிர்த்து நடைபெறவுள்ள கண்டன விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க.அவசர செயற்குழு கூட்டம், ஓசூரில் தளி சாலையில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ் கலந்து கொண்டு பேசினார். மேலும், மாவட்ட துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.முருகன், மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கூட்டத்தில் பேசினர்.

இதில், இந்தி திணிப்பை எதிர்த்து நடைபெறவுள்ள கண்டன விளக்க பொதுக்கூட்டம் குறித்தும்,

மாநகரம், ஒன்றியம், பேரூர் பகுதிகளில் நடைபெறவிருக்கும் பொது உறுப்பினர்கள் கூட்டம் குறித்தும்,கட்சி ஆக்கப்பணிகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

மேலும் கூட்டத்தில், மாவட்ட, மாநகர, ஒன்றிய பேரூர் நிர்வாகி கள், அணிகளின் அமைப்பாளர்கள், பகுதி செயலாளர்கள் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News