உள்ளூர் செய்திகள்

ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக திகழ்ந்திருப்பார்- ரஜினி இரங்கல்

Published On 2023-12-29 07:57 IST   |   Update On 2023-12-29 09:19:00 IST
  • அசாத்தியமான மனஉறுதி கொண்டவர். மீண்டும் உடல் ஆரோக்கியம் பெற்று திரும்பி வந்துவிடுவார் என்று நாம் அனைவரையும் நினைத்தோம்.
  • அன்பு நண்பர் விஜயகாந்த்-ஐ இழந்தது மிகப்பெரிய துரதிருஷ்டம்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது உடல் தீவுத்திடலில் தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4.45 மணிக்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

சினிமா பிரபலங்கள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினி காந்த் நாகர்கோவிலில் வேட்டையன் படப்பிடிப்பில் இருந்தார். விஜயகாந்த் காலமான செய்தி அறிந்து, படப்பிடிப்பை ரத்து செய்து சென்னை திரும்புகிறார்.

இந்த நிலையில் இன்று காலை தூத்துக்குடி வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அன்பு நண்பர் விஜயகாந்த்-ஐ இழந்தது மிகப்பெரிய துரதிருஷ்டம். அசாத்தியமான மனஉறுதி கொண்டவர். மீண்டும் உடல் ஆரோக்கியம் பெற்று திரும்பி வந்துவிடுவார் என்று நாம் அனைவரையும் நினைத்தோம். பொதுக்குழுவில் அவரை பார்க்கும்போது சற்று நம்பிக்கை குறைந்துவிட்டது. ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக திகழ்ந்திருப்பார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என ரஜினி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ரஜினி தெரிவித்தார்.

Tags:    

Similar News