உள்ளூர் செய்திகள்
பழவேற்காடு ஊராட்சியில் துப்புரவு துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளி பரிசுகள்
- ஊராட்சி மன்ற தலைவர் மாலதி சரவணன் முன்னிலையில் இனிப்பு, அரிசி, புடவை,, வேஷ்டி வழங்கப்பட்டது.
- சிறப்பு அழைப்பாளர்களாக காளிகாம்பாள் கோயில் அறங்காவலர் பழனியப்பன் பங்கேற்றார்
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஊராட்சியில் தீபாவளி திருநாளை முன்னிட்டு ஊராட்சி மன்றத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் அனைவருக்கும். ஊராட்சி மன்ற தலைவர் மாலதி சரவணன் முன்னிலையில் இனிப்பு, அரிசி, புடவை, வேஷ்டி வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக காளிகாம்பாள் கோயில் அறங்காவலர் பழனியப்பன், ஜம்போ பேக் நிறுவன தலைமை பணியாளர் சதா, பிஜேபி மாவட்ட மீனவர் அணி தலைவர் சுப்பிரமணி, அண்ணாமலை கன்ஸ்ட்ரக்சன் நிறுவன தலைவர் ராஜ்கமல் ஆகியோர் கலந்து கொண்டனர்