உள்ளூர் செய்திகள்
தீபாவளி பண்டிகை: ஏழைக் குழந்தைகளுக்கு புத்தாடை, பட்டாசு, இனிப்பு வழங்கிய பாஜக
- 70 ஏழை குழந்தைகளுக்கு பட்டாசு மற்றும் புத்தாடை இனிப்பு வழங்கப்பட்டது.
- தமிழக பாஜகவின் பிற மொழி பிரிவு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பொன்னேரி:
தீபாவளி திருநாள் உலகமெங்கும் கொண்டாடப்படும் நிலையில், ஏழைகளும் தீபாவளி திருநாளை கொண்டாடும் வகையில் பொன்னேரியில் பாஜக சார்பில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பிறமொழி பிரிவு மாவட்ட தலைவர் ஆர்.பிரகாஷ் சர்மா ஏற்பாட்டில் 70 ஏழை குழந்தைகளுக்கு பட்டாசு மற்றும் புத்தாடை இனிப்பு வழங்கப்பட்டது.
இதில் தமிழக பாஜகவின் பிற மொழி பிரிவு நிர்வாகிகள், திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், ஒன்றிய, நகர நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்துகொண்டனர்.