உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற தேரியூர் அணியினருக்கு கோப்பை வழங்கப்பட்ட காட்சி.

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி - தேரியூர் அணி முதல் இடம்

Published On 2023-06-23 08:54 GMT   |   Update On 2023-06-23 08:54 GMT
  • மாவட்ட அளவில் 32 அணிகள் கலந்துகொண்ட கிரிக்கெட் போட்டி 4 நாட்கள் நடந்தது.
  • போட்டியில் நான்காம் பரிசை வாழத்தூர் அணி வென்றது

உடன்குடி:

உடன்குடி பேரூர் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி மாவட்ட அளவில் 32 அணிகள் கலந்துகொண்ட கிரிக்கெட் போட்டி 4 நாட்கள் தேரியூர் மைதானத்தில் நடந்தது.

இதில் முதல் பரிசு ரூ. 10 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பையை தேரியூர் ஸ்பார்ட்டன்ஸ் அணியும், இரண்டாவது பரிசு ரூ. 7 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பையை வடக்கு காலன்குடியிருப்பு அணியும், மூன்றாவது பரிசு ரூ. 5 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பையை குருநாதபுரம் அணியும், நான்காம் பரிசு ரூ. 3ஆயிரம் மற்றும் வெற்றிக் கோப்பையை வாழத்தூர் அணியும் வென்றது.

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா உடன்குடி மெயின் பஜாரில் நடந்தது. உடன்குடி பேரூர் தி.மு.க., செயலாளரும், உடன்குடி பேருராட்சி துணைத்தலைவருமான சந்தையடியூர் மால்ராஜேஷ் தலைமை தாங்கி வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் வெற்றி கோப்பை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு. உடன்குடி பேரூராட்சி பணி நியமனக்குழு தலைவர் ஜாண் பாஸ்கர், உடன்குடி பேரூர் அவைத்தலைவர் அப்துல் ரசாக், பேரூர் துணைச் செயலாளர்கள் தங்கம், பிரவீனா, பொருளாளர் திரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் கவுன்சிலர் சலீம் வரவேற்றார். இதில் மாவட்ட பிரதிநிதிகள் ஹீபர் மோசஸ், முபாரக், மதன், உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர்கள் பஷீர், மும்தாஜ், வார்டு செயலாளர்கள் அன்வர் சலீம், சித்திரைசெல்வன், முருகேசன் பாலசிங் பாண்டியன், ஆனந்த், கணேசன், சாம்னேஸ், முத்துப்பாண்டி, கணேஷ், நாராயணன், ஒன்றிய பிரதிநிதிகள் ஹரி இசக்கிமுத்து, இஸ்மாயில், உடன்குடி பேரூர் வர்த்தக அணி அமைப்பாளர் மனோ, உடன்குடி ஒன்றிய முன்னாள் செயலாளர் சக்திவேல், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் மெராஜ், உடன்குடி ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் பாய்ஸ், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மஹாவிஷ்ணு, மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ் மற்றும் லெட்சுமி, ஜெபமலர், தீபன் சக்கரவர்த்தி, ஆட்டோ கணேசன், குங்ஃபூ சங்கர், சிவப்பிரசாத், கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News