உள்ளூர் செய்திகள்
தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி
- நகராட்சி தலைவர் பரிதா நவாப், கலந்து கொண்டு 365 தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடை, கையுறை வழங்கி பாராட்டினார்.
- தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் சீருடை மற்றும் கையுறை அணிந்தே பணி செய்ய வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில், என் குப்பை, என் பொறுப்பு என்ற தலைப்பில், தூய்மைப் பணியாளர்களை பாராட்டி, சீருடை வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதற்கு நகராட்சி ஆணையாளர் வசந்தி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் பரிதா நவாப், கலந்து கொண்டு 365 தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடை, கையுறை வழங்கி பாராட்டினார். மேலும், தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் சீருடை மற்றும் கையுறை அணிந்தே பணி செய்ய வேண்டும்.
நகரை தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து நகரை தூய்மையாக வைத்திருப்போம் என்பதை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். இதில், கவுன்சிலர்கள் தேன்மொழி, புவனேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.