உள்ளூர் செய்திகள்

நெல்லை டவுன் பெண்கள் பள்ளியில் இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி விதைப்பந்து பேனா விநியோகம்

Published On 2023-11-14 08:48 GMT   |   Update On 2023-11-14 08:48 GMT
  • விழாவில் 2,800 பள்ளி மாணவிகளுக்கு விதைபந்து பேனா வழங்கப்பட்டது.
  • விதைகள் பந்து பேனாவை உபயோகப்படுத்தி விட்டு தூக்கி எரியும்போது அதிலிருந்து மரம் உருவாகும்.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி கல்லணை மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி துணை மேயர் கே.ஆர். ராஜூ கலந்து கொண்டு மாணவிகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி 2,800 பள்ளி மாணவிகளுக்கு இயற்கையால் செய்யப்பட்ட விதைபந்து பேனா வழங்கினார்.

இதில் பேசிய துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நமது பாரம்பரிய அகத்தி, வேப்பமரம் போன்ற மரங்களின் இருக்கும் விதைகள் பந்து பேனாவை உபயோகப்படுத்தி விட்டு தூக்கி எரியும்போது அதிலிருந்து மரம் உருவாகும். பள்ளி மாணவர்கள் அனைவரும் இந்த கூட்டு முயற்சியில் ஈடுபட்டு அந்த மரத்தை வளர்க்க வேண்டும். அவ்வாறு மரம் வளர்க்கும் மாணவிகளுக்கு உங்கள் ஆசிரியர், பெருமக்களின் உதவியோடு அதற்கான ஊக்கமும் பரிசும் நான் நிச்சயம் தருவேன் என்று உறுதி அளித்தார். நிகழ்ச்சியில் கவுன்சிலர் அனார்கலி, பகுதி துணைச் செயலாளர் அப்துல் சுபஹானி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News