உள்ளூர் செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் 100 சதவீத மானியத்தில் பனை விதைகள் வினியோகம்

Published On 2022-10-31 10:12 GMT   |   Update On 2022-10-31 10:12 GMT
  • பனை மரங்கள் 212 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
  • தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பனை விதைகள் 30 ஆயிரம் எண்கள் இலக்கு பெறப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;-

தஞ்சை மாவட்டத்தில் பனை மரங்கள் 212 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்கும் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்ப டுத்தவும் தோட்டக்கலை துறை மூலம் பனை மேம்பாட்டு இயக்கம் 2022-23-ம் ஆண்டில் சிறப்பு திட்டமாக அறிமுகப்படு த்தப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பனை விதைகள் 30 ஆயிரம் எண்கள் இலக்கு பெறப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 50 விதைகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

ஆர்வமுள்ள விவசாயிகள் http://tnhorticulture.tn.gov.in./tnhortnet என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். அல்லது அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலர்களை அணுகி பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News