உள்ளூர் செய்திகள்

சூளகிரி பகுதியில் அரசு அலுவலக பெயர் பலகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.

மறையும் அரசு பெயர் பலகைகள்

Published On 2023-01-21 15:41 IST   |   Update On 2023-01-21 15:41:00 IST
  • பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன.
  • மறைக்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அரசு திட்ட விளம்பரம் மற்றும் அரசு கட்டிட அடிக்கல், அரசு பள்ளி கூட சுற்று சுவர்களில் ரசிகர் மன்றம், பிறந்த நாள், திருமணம்,ஆர்பாட்டம், கட்சி நிகழ்ச்சிகள் ,மரண அறிவிப்பு மற்றும் பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன.

இதனால் அரசு சார்ந்த தகவல்கள் மறைக்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் இது யார் தொடங்கி வைத்த கட்டிடம் என்ற வரலாறே மறைக்கப்படுவதாலும், கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் மறைக்கப்படுவதாலும் வெளியூர்,உள்ளுர் வாசிகளுக்கு எந்த தகவலும் தெரியாத நிலை உள்ளது.

இனி வரும் காலங்களில் சுவர் ஒட்டிகளை தடை செய்ய வேண்டும். விதிமீறி ஒட்டுபவர்கள் மீது காவல்துறை சார்பில் நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News