உள்ளூர் செய்திகள்

தாசில்தார் ரவிச்சந்திரன் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

மாற்றுத்திறனாளிகள் தாசில்தாரிடம் மனு

Published On 2023-06-27 13:13 IST   |   Update On 2023-06-27 13:13:00 IST
  • 70-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தாசில்தார் அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.
  • மேல் பகுதியில் சென்று வர இயலாது என்பதால் தாசில்தார் ரவிச்சந்திரன் கீழ் பகுதிக்கு வந்து மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாவட்ட துணை செயலாளர் கருணாகரன் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தாசில்தார் அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர். அப்போது மாற்றுத்திறனாளிகள் தாலுகா அலுவலகத்தில் மேல் பகுதியில் சென்று வர இயலாது என்பதால் தாசில்தார் ரவிச்சந்திரன் கீழ் பகுதிக்கு வந்து மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். பின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News