சப்பர பவனியை முன்னாள் அமைச்சர் சி.சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மேற்குமரியநாதபுரம் புனித விண்ணேற்பு அன்னை ஆலய சப்பர பவனி
- 109 ஆம் ஆண்டு பெருவிழா, கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- அ.தி.மு.க பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி. சீனிவாசன் கலந்து கொண்டு சப்பர பவனியை தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மறைமாவட்டம் மேற்கு மரியநாதபுரம் பங்கு புனித விண்ணேற்பு அன்னையின் ஆண்டு பெருவிழா வருடந்தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி 109 ஆம் ஆண்டு பெருவிழா, கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து நாள்தோறும் நவநாள் திருப்பலி நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று இரவு சப்பர பவனி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி. சீனிவாசன் கலந்து கொண்டு சப்பர பவனியை தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரதி முருகன், இளைஞரணி மாவட்ட செயலாளர் வி.டி.ராஜன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, முரளி, வார்டு செயலாளர் சிரியோன், சக்கிரியஸ், வில்லியம் ஜான் போஸ்கோ மற்றும் பங்குத்தந்தை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.