கோப்பு படம்
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் வழுக்கி விழுந்து மூதாட்டி பலி
- மூதாட்டி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஆண்கள் மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
- இந்நிலையில் கழிவறையில் வழுக்கி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே சின்னாளபட்டி, மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது மனைவி லெட்சுமி (58). கடந்த சில நாட்களாக துரைராஜ் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆண்கள் மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவருக்கு உதவியாக மனைவி லெட்சுமி இருந்து வந்தார். இந்நிலையில் இன்று காலை அந்த வார்டில் உள்ள கழிவறைக்கு சென்ற லெட்சுமி நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனையடுத்து அங்கு சென்று பார்த்த போது வழுக்கி விழுந்து சுயநினைவு இன்றி விழுந்து கிடந்தார். இவரை மீட்டு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக லெட்சுமி உயிரிழந்தார். அரசு ஆஸ்பத்திரி வார்டு கழிவறையில் வழுக்கி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.