உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.


திண்டுக்கல் மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோவிலில் இன்று மாலை சூரசம்ஹாரம்

Published On 2023-10-24 10:29 IST   |   Update On 2023-10-24 13:53:00 IST
  • நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
  • கேரளா செண்டை மேளம் உடன் நான்கு ரத வீதிகளில் மின் தேரில் உலா வந்து, கோவில் முன்பு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் வருடந்தோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. முக்கிய திருவிழாவான நவராத்திரி உற்சவ விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது. காலை பவ கணபதி ஹோமம், சூழினி துர்க்கா ஹோமம் மற்றும் லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் நடைபெற்றது.

தொடர்ந்து மாலை சிம்ம வாகனத்தில் மகிசாசூரவர்த்தினி அலங்காரத்தில், கேரளா செண்டை மேளம் உடன் நான்கு ரத வீதிகளில் மின் தேரில் உலா வந்து, கோவில் முன்பு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து வாண வேடிக்கை நிகழ்ச்சியும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக தலைவர் எஸ்.டி.சி பாண்டி, செயலாளர் மகேந்திரன், பொருளாளர் சம்பத்ராஜன், உப தலைவர் வாசுதேவன் மற்றும் திரிசூலம் குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News