உள்ளூர் செய்திகள்

தருமபுரி நகராட்சியில் 60 டன் குப்பைகள் அகற்றம்

Published On 2023-10-25 15:18 IST   |   Update On 2023-10-25 15:20:00 IST
  • தருமபுரி நகராட்சியில் 60 டன் குப்பைகள் அகற்றப்பட்டது.
  • குப்பைகளை அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.

தருமபுரி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் நகராட்சி நிர்வாகம் தினந்தோறும் 10 டன்னுக்கு மேல் குப்பை களை அகற்றி வருகிறது.

இந்த நிலையில் தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடுவதற்காக வணிக நிறுவனங்கள் கடைகள் மற்றும் வீடுகளில் சுத்தம் செய்யப்பட்ட குப்பை களை கொட்டி உள்ளனர். மேலும் 2 நாட்களில் பூஜைக்காக பயன்படுத்திய வாழை மரங்கள், பூசணிக்காய், மாங்கொத்து உள்ளிட்டவற்றை தங்களது வணிக நிறுவனங்கள் கடை கள் முன் விட்டு சென்றுள்ளனர்.

மேலும் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த பூசணிக்காய், வாழை மரங்களை நேற்று மாலை வரை விற்பனை செய்துவிட்டு மீதமுள்ள ஆயிரக்கணக்கான மரங்–களை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை, பாரதிபுரம், நெசவா ளர் காலனி, 4 ரோடு, பெரியார் மன்றம் உள்ளிட்ட பகுதி களில் ஆங்காங்கே விட்டு விட்டு சென்றுள்ளனர்,

இந்த குப்பைகளை அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. 33 வார்டுகளில் இன்று ஒரு நாள் மட்டும் 60 டன் குப்பைகளுக்கு மேல் சேக–ரித்து நகராட்சியில் உள்ள உரக்கடங்கில் சேர்த்ததாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News