விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
தருமபுரி சட்ட கல்லூரியில் இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம்
- தருமபுரி மாவட்ட சைபர் பிரிவு காவல்துறை ஆய்வாளர் சரண்யா இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினார்.
- முடிவில் நேரு யுவகேந்திரா சார்ந்த ஹரி பிரசாந்த் நன்றியுரை வழங்கினார்.
தருமபுரி,
மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சகம் தருமபுரி மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பாக தருமபுரி மாவட்ட அரசு சட்ட கல்லூரியில் இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் கல்லூரி முதல்வர் சிவதாஸ் வரவேற்புரை ஆற்றினார். நேரு யுவகேந்திரா கணக்கு மற்றும் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் நோக்கவுரை வழங்கினார்.தருமபுரி மாவட்ட சைபர் பிரிவு காவல்துறை ஆய்வாளர் சரண்யா இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியை ரேகா மற்றும் மாணவ, மாணவிகள் துறை பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் நேரு யுவகேந்திரா சார்ந்த ஹரி பிரசாந்த் நன்றியுரை வழங்கினார்.