உள்ளூர் செய்திகள்

 ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சை செய்து சாதனை படைத்த மருத்துவர்களை படத்தில் காணலாம்.

தருமபுரி அரசு மருத்துவமனையில் 2 வருடங்களில் 500 ஆஞ்சியோகிராம் சிகிச்சைகள் செய்து மருத்துவர்கள் சாதனை

Published On 2022-06-22 14:55 IST   |   Update On 2022-06-22 14:55:00 IST
  • இருதயப்பிரிவு டாக்டர்களுக்கு டீன் பாராட்டுக்களை தெரிவித்தார்.
  • 57 ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன.

தருமபுரி, 

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் கடந்த 2019-ம் ஆண்டு இருதய சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது.

மாரடைப்பு நோய் தொடர்பான உயர் சிகிச்சை களுக்கு அதுவரை சேலம், சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

தருமபுரியில் இந்த பிரிவு தொடங்கப்பட்ட பிறகு கடந்த 2 வருடங்களில் 500 ஆஞ்சியோகிராம், 57 ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் ஏழை, எளிய மக்கள் எளிதாக உயர்தர சிகிச்சை பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவமனையின் டீன் அமுதவல்லி, மருத்துவ கண்காணிப்பாளர் சிவக்குமார், உள்மருத்துவ அலுவலர் நாகவேந்தன், இருதய பிரிவு மருத்துவர்கள் குமார் ராஜா, கண்ணன், சிவசண்முகநாதன் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார். 

Similar News