சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.
தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு
- சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
- தருமபுரி வட்டாரத்தை சேர்ந்த சுமார் 500 கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் மூலம் தருமபுரி வட்டாரத்தில் ஊட்டச்சத்து பகுதியாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரி வட்டாரத்தை சேர்ந்த சுமார் 500 கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர்.
தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பனர் ஏ.கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர். பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு சந்தனம், மஞ்சள் குங்குமம் வைத்து கைகளுக்கு வளையல் அணிவித்தனர்.
மேலும் பரிசு பொருள்கள் வழங்கி அனைவருக்கும் ஊட்டச்சத்து உணவினையும் கர்ப்ப காலத்தில் உட்கொள்ள வேண்டிய உணவு முறைகள், குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து நிறைந்த பொருட்கள் மற்றும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல், மருத்துவ பரிசோதனைகள் குறித்த அறிவுரைகளையும் வழங்கினர்.