உள்ளூர் செய்திகள்

தருமபுரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி சக்தி-அம்சவேணியை படத்தில் காணலாம்.

தருமபுரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

Published On 2023-09-08 10:01 GMT   |   Update On 2023-09-08 10:01 GMT
  • தொடர்ந்து 5 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்தனர்.
  • காதல் திருமணம் செய்து கொண்ட அவர்கள் சென்னையில் வசித்து வந்தனர்.

தருமபுரி,  

தருமபுரி அருகே அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் சக்தி (வயது 23). பட்டதாரியான இவர் டிரைவர் வேலை செய்து வந்தார். இவரும் தருமபுரி டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த அம்சவேணி (22) என்பவரும் இலக்கியம்பட்டி அரசு பள்ளியில் படிக்கும்போது பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் தொடர்ந்து 5 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் இவரது காதல் விவகாரம் அம்சவேணியின் வீட்டிற்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு அம்சவேணியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனால் காதல்ஜோடி இருவரும் வீட்டைவிட்டு சென்று கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். காதல் திருமணம் செய்து கொண்ட அவர்கள் சென்னையில் வசித்து வந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பெண் வீட்டார் அம்ச–வேணியை மிரட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் தனது மகளை காணவில்லை என்று அம்சவேணியின் தந்தை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அம்சவேணியை தேடி வருவதை அறிந்து, தனது காதல் கணவருடன் அவர் பாதுகாப்பு கேட்டு இன்று தருமபுரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். அங்கு அம்சவேணி தான் காதல் திருமணம் செய்ததை தனது தந்தை பிடிக்காததால் அவர்கள் தங்களை மிரட்டி வருவதாகவும், எனவே, தங்களுக்கு பாதுகாப்பு தருமாறு புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து போலீசார் காதல்ஜோடியின் பெண் வீட்டாரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் பெண் வீட்டார் சமா–தானம் ஆகாத தால், பெண்ணை காதல் கணவ ருடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News