உள்ளூர் செய்திகள்
தருமபுரி கலை கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
- பைசுஅள்ளி பெரியார் பல்கலைக்கழக கணிதவியல் துறை சார்பாக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
- பாராட்டு தெரிவித்து சுழற் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பைசுஅள்ளி பெரியார் பல்கலைக்கழக கணிதவியல் துறை சார்பாக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
போட்டிகளில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி கணிதவியல் துறையின் இளநிலை இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு, முதுநிலை முதலாம் ஆண்டு, மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.
மேலும் ஒட்டுமொத்தமாக இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். அதற்கு பாராட்டு தெரிவித்து சுழற் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்கு விக்கும் வகையில் தருமபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன் மற்றும் கணிதத் துறை தலைவர் அரங்கநாயகி மற்ற பேராசிரியர்கள் மற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டி கவுரவப்படுத்தினர்.