உள்ளூர் செய்திகள்

தருமபுரி நகர் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முகாமினை மாவட்ட கலெக்டர் சாந்தி, தொடங்கி வைத்து, பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். அருகில் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவல்லி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் உள்பட பலர் உள்ளனர்.

5.15 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை

Published On 2023-02-15 15:10 IST   |   Update On 2023-02-15 15:10:00 IST
  • பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடைபெற்றது.
  • குடலில் உள்ள புழுக்களை அழிப்ப தற்காக இம்மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

தருமபுரி, 

தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்ப ள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமினை மாவட்ட கலெக்டர் சாந்தி, தொடங்கி வைத்து, பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.

சிறு குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்படக்கூடிய மாத்திரை குடற்புழு நீக்க மாத்திரை ஆகும். காரணம், குழந்தைகள் உண்ணுகின்ற உணவில் உள்ள சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு முழுமையாக கிடைப்பதற்கு குடலில் உள்ள புழுக்களை அழிப்ப தற்காக இம்மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

இதனை குழந்தைகள் அனைவரும் கட்டாயம் எடுத்துக்கொண்டு தங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திட முன்வர வேண்டும்.

மேலும், குடற்புழு நீக்க மருந்து, மாத்திரைகள் (அல்பெண்டசோல்) குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகையை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சுறுசுறுப்பாக இருக்கவும், அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது.

தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் 5.15 லட்சம் குழந்தைகளுக்கும் மற்றும் 20-வயது முதல் 30-வயது வரை உள்ள 1.22 லட்சம் பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.

குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) குழந்தைகள் உட்கொ ள்வதால் ஏற்படும் நன்மைகள் இரத்தசோகையை தடுக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது, அறிவுத்திறன் மேம்படுகிறது, உடல் வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது.

இந்நிகழ்ச்சியில் அரசு தருமபுரி மருத்துவக்கல்லுரி மருத்துவமனை முதல்வர் அமுதவல்லி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தெரசாள், ஆசிரிய, ஆசிரியைகள், மாண வியர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News