உள்ளூர் செய்திகள்

திருவிடைக்கழி சுப்பிரமணியசாமி கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

தைப்பூசத்தையொட்டி திருவிடைக்கழி சுப்பிரமணியசாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்

Published On 2023-02-06 07:44 GMT   |   Update On 2023-02-06 07:44 GMT
  • அருணகிரிநாதரால், சேந்தனார் பெருமானால் பாடல் பெற்ற தலமாகும்.
  • சிறந்த அறிவும் பெற்று, திருமணத்தடை நீங்கி சுபிட்சம் பெருகும்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருவிடைக்கழி கிராமத்தில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.

அருணகிரிநாதரால், சேந்தனார் பெருமானால் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.

முசுகுந்த சக்கரவர்த்தியால் ஏற்படுத்தப்பட்ட இந்த கோயில் சூரபத்மனின் இரண்டாவது மகன் ஹிரண்யாசுரணை கொன்ற பாவம் நீங்க குரா மரத்தடியில் முருகப்பெருமான் சிவபூஜை செய்து பாவ விமோசனம் பெற்ற ஸ்தலமாக தலபுராணம் கூறுகின்றது.

இத்தலம் திருச்செந்தூ ருக்கு நிகராக போற்றப்படுகிறது.

இத்தலத்தில் உள்ள குரா மரத்தின் அடியில் தியானம் செய்ய மனதெரிவு, அறிவுக்கூர்மை உண்டாகும். மேலும் முருகன், தெய்வானை திருமண நிச்சயம் நடைபெற்ற ஸ்லமாதலால் இங்கு வழிபடுபவருக்கு தீரா பழி நீங்கி, மனதெரிவு, சிறந்த அறிவும் பெற்று, திருமணத்தடை நீங்கி சுபிட்சம் பெருகும் எனவும் கூறப்படுகிறது.

இத்தகைய சிறப்புமிக்க இக்கோவிலில் நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இதில் அதிகாலை முதல் 3 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் நின்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் ஜெயராமன், செயல் அலுவலர் ரம்யா ஆகியோர் செய்துயிருந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Tags:    

Similar News