உள்ளூர் செய்திகள்

கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள செடி கொடிகள்.

சிதிலமடைந்த கோவிலை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

Update: 2022-06-27 09:09 GMT
  • ஆண்டாங்கோவிலில் உள்ள சிவகேசரி அம்பாள் சமேத சுவர்ணபுரீஸ்வரர் கோவில் அப்பர் சாமிகளால் பாடல் பெற்ற தலம்.
  • கோவில் கோபுரத்தில் மரக்கன்றுகள், செடி கொடிகள் வளர்ந்து சிதிலமடைந்து காணப்படுகிறது.

நீடாமங்கலம்:

வலங்கைமான் அருகே ஆண்டாங்கோவில் கிராமத்தில் ஸ்ரீசிவகேசரி அம்பாள் சமேத சுவர்ணபுரீஸ்வரர் கோவில் உள்ளது. அப்பர் சுவாமிகளால் பாடல் பெற்ற திருத்தலம். பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர்.

தற்போது இந்த கோவில் சிதிலமடைந்து காணப்படுகிறது. கோவில் கோபுரத்தில் மரக்கன்றுகள், செடி கொடிகள் வளர்ந்து சிதிலமடைந்துள்ளது. எனவே உடனடியாக கோவிலை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News