கிருஷ்ணகிரி நகராட்சியில் ரூ.2.10 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்
- ரூ.1.15 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அறிவுசார் மைய கட்டிட பணிகளை பார்வை யிட்டார்.
- குடிநீர் வினியோகம், தூய்மை பணிகளை நக ராட்சி பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகராட்சி யில் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பில் நடை பெற்ற வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் சரயு ஆய்வு செய்தார். அதன் படி, கிருஷ்ணகிரி பழைய பேட்டை பழைய பஸ் நிலைய வளாகத்தில் கலைஞர் நகர்புற மேம் பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.1.15 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அறிவுசார் மைய கட்டிட பணிகளை பார்வை யிட்டார்.
தொடர்ந்து, திருவண் ணாமலை சாலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ரூ.43 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை மக்காத திடக்கழிவுகள் சேகரிப்பு மைய கட்டிட கட்டுமான பணிகளையும், நுண்ணுயிரி உரம் தயாரிப்பு மையத்தில், நகரில் சேரும் மக்கும் குப்பை, பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்கா குப்பைகள் தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
பின்னர், சேலம் மேம் பாலம் அருகில், சுமார் 9 எம்எல்டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, கிருஷ்ணகிரி நகராட்சியிலிருந்து நாள்தோறும் 6 முதல் 7 எம்எல்டி கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து வெளி யேற்றும் பணிகளையும், இவ்வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், கழிவுகசடுகளை சுத்தி கரிப்பு செய்து வெளி யேற்றும் பணிகளுக்காக ரூ.16 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட கட்டுமான பணிகளை பார்வையிட்டு கலெக்டர் வளாகத்தை சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரிக்க அறிவுறுத்தினார்.
மேலும், பொதுமக்களின் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் குடிநீர் வினியோகம், தூய்மை பணிகளை நக ராட்சி பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, நகராட்சி ஆணையர் வசந்தி, செயற்பொறியாளர் சேகரன், சுகாதார ஆய்வா ளர் ராமகிருஷ்ணன், நகர கட்டமைப்பு அலுவலர் செந்தில், வருவாய் ஆய்வா ளர் மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.