உள்ளூர் செய்திகள்

கல்வராயன்மலையில் 3600 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்புகுற்றவாளிகளுக்கு வலை வீச்சு

Published On 2023-04-11 06:23 GMT   |   Update On 2023-04-11 06:23 GMT
  • கல்வராயன் மலை, கரியாலூர் போலீசார் கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
  • அங்கு 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 8 பிளாஸ்டிக் பேரல்களில் 1600 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் இருந்ததை போலீசார் கண்டனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள தாழ்மொழிபட்டு கிராமத்தின் அருகில் கல்வராயன் மலை, கரியாலூர் போலீசார் கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 8 பிளாஸ்டிக் பேரல்களில் 1600 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் இருந்ததை போலீசார் கண்டனர். இதனை போலீசார் சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர்.   

அதேபோல் கல்வராயன் மலை சிறுகலூர் கிராம தெற்கு ஓடையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தாரனேஸ்வரி தலைமையில் தனி படை போலீசார் கல்வராயன்மலை சிறுகலூர் கிராம தெற்கு ஓடை அருகில் கள்ள சாராயம் சம்பந்தமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு 2000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் மற்றும் லாரி டியூப்பில் 260 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையும் சம்பவ இடத்திலேயே போலீசார் கொட்டி அழித்தனர். இதில் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாகியுள்ள சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News