உள்ளூர் செய்திகள்

மருத்துவ குழுவினர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி.

டெங்கு தடுப்பு பணிகள் மும்முரம்

Published On 2023-09-22 15:25 IST   |   Update On 2023-09-22 15:25:00 IST
  • டெங்கு பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய மருத்துவ சிகிச்சை குறித்து பேசினார்.
  • பாதிக்கப்பட்ட வர்கள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

கடத்தூர்,

தமிழகத்தில் பல பகுதிகளில் டெங்கு பரவி வருகின்ற நிலையில் மருத்துவ துறையினர் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டம், கடத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் டெங்கு பரவாமல் இருக்கும் வகையில் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில் கடத்தூர் மருத்துவ அலுவளர் கனல்வேந்தன், வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் மதியழகன், சுகாதார மேற்பார்வையாளர்கள் ரமேஸ், பார்தீபன், விக்னேஸ் மற்றும் மருத்துவ குழுவினர் தடுப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இதில் பொதுமக்களிடம் டெங்கு பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள், மே ற்கொள்ள வேண்டிய மருத்துவ சிகிச்சை ஆகியவை குறித்து விளக்கி பேசினார். மேலும் பாதிக்கப்பட்ட வர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Similar News