உள்ளூர் செய்திகள்

மங்கலம் பேட்டையில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-23 05:51 GMT   |   Update On 2023-07-23 05:51 GMT
  • கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • மணிப்பூர் மாநில அரசுகளைக் கண்டித்து, கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.

கடலூர்:

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் இனக் கலவரத்தில், 2 பழங்குடியின சமுதாயப் பெண்களை நிர்வாண மாக்கி, கற்பழித்ததை கண்டித்தும், கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளைக் கண்டித்தும், மணிப்பூர் மாநில அரசை உடனடியாக கலைத்திட வேண்டுமென வலியுறுத்தியும், மங்கலம்பேட்டை நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைப்பில், அனைத்துக் கட்சிகள் சார்பில், மங்கலம்பேட்டை தேரடி வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கடசி நகர செயலாளர் அம்பேத் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில், இந்திய குடியரசு கட்சியின் மாநில முன்னாள் இணைப் பொதுச்செயலாளர் மங்காபிள்ளை,விடுதலை சிறுத்தைகள் சமூக ஊடக மாநில துணைச் செயலாளர் ராஜ்குமார், தி.மு.க.நகர அவைத் தலைவர் முஹம்மது யூசுப், மாவட்ட தி.மு.க.பிரதிநிதி குழந்தை சுதந்திரன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய செயலாளர் வெங்கடாச்சலம், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் இக்பால், விடுதலை சிறுத்தைகள் கட்சி ந கர துணைச் செயலாளர் தனக்குமார், ம.தி.மு.க.பிரமுகர் விக்னேஷ், விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் அறிவழகன், மக்கள் அதிகாரம் அமைப்பு பிரமுகர் மணிவாசகன், காங்கிரஸ் கட்சி பிரமுகர் மணிகண்டன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சிவக்குமார், வக்கீல் கிருஷ்ண மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டு, மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளைக் கண்டித்து, கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News