உள்ளூர் செய்திகள்

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-25 15:44 IST   |   Update On 2023-03-25 15:44:00 IST
  • சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
  • நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் எதிரில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது.

சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும். பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் தங்கராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் செந்தில்குமார், வட்ட தலைவர் சரவணன், செயலாளர் முத்துராமன், பொருளாளர் இளவரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். முன்னதாக கோட்ட செயலாளர் சங்கர் வரவேற்றார். முடிவில், மாவட்ட துணை செயலாளர் தினேஷ்குமார் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News