உள்ளூர் செய்திகள்

அரசு கூட்டுறவு துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-04-11 15:28 IST   |   Update On 2023-04-11 15:28:00 IST
  • செங்கல்பட்டு துணைப் பதிவாளர் உமாதேவியை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.

கிருஷ்ணகிரி,

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு, செங்கல்பட்டு துணைப் பதிவாளர் உமாதேவியை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ரவிக்குமார் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சந்திரன், அரசு ஊழியர் சங்க மகளிர் அமைப்பாளர் ஜெகதாம்பிகா ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். கூட்டுறவு சங்க இணைச் செயலாளர் பானுமதி நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில், செங்கல்பட்டு துணைப் பதிவாளர் (வீட்டு வசதி) அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களை தரக்குறைவாகவும், கண்ணியமற்ற முறையில் பேசியும், மாதாந்திர ஊதியப் பட்டியலில் கையொப்பமிடாமலும் மற்றும் துறை உயர் அதிகாரிகளையும் இழிவாக பேசி, அடாவடித்தனம் செய்யும், துணைப்பதிவாளர் (வீட்டு வசதி) உமாதேவியை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

Tags:    

Similar News