உள்ளூர் செய்திகள்

சேறும், சகதியுமான சாலை.

திட்டக்குடி நகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் நிலையத்தில் புகார் மனு

Published On 2023-11-23 12:33 IST   |   Update On 2023-11-23 12:33:00 IST
நகராட்சி மூலம் சுத்தம் செய்து அசுத்தமான பொருட்கள் மற்றும் மண் ஆகியவற்றை கிழக்கு தெருவில் அப்படியே போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட கோழியூர் 9-வது வார்டு கிழக்கு தெரு முழுவதும் கழிவுநீர் வாய்க்காலில் இருந்து திட்டக்குடி நகராட்சி மூலம் சுத்தம் செய்து அதிலிருந்து எடுக்கப்பட்ட அசுத்தமான பொருட்கள் மற்றும் மண் ஆகியவற்றை கிழக்கு தெருவில் அப்படியே போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

தற்பொழுது கிழக்கு தெரு முழுவதும் சாக்கடையால் அசுத்தமாகி துர்நாற்றம் வீசுவதோடு அதின் மேல் பள்ளி குழந்தைகள், வயதானவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலையில் உள்ளது பாதுகாப்பற்ற முறையில் பொதுமக்களுக்கு நோய் ஏற்படுத்தக் கூடிய வகையில் கழிவு நீரை சாக்கடையை சாலையில் போட்டு சென்றுள்ள திட்டக்குடி நகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை உரிய நடவடிக்கை எடுக்குமாறு திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Tags:    

Similar News