உள்ளூர் செய்திகள்

கூட்டத்தின் போது எடுத்த படம்.

பழங்குடி மக்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்க கோரிக்கை

Published On 2023-01-22 14:56 IST   |   Update On 2023-01-22 14:56:00 IST
  • மாநில எஸ்.டி.அணி செயலாளர் பாப்பண்ணா தலைமை தாங்கினார்.
  • தலைமையின் அனுமதியுடன்,அடுத்த மாதம் சென்னையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

ஓசூர்,

பா.ஜனதா கட்சியின் எஸ்.டி அணி மாநில செயற்குழு கூட்டம், ஓசூரில் நடைபெற்றது.

ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு, மாநில எஸ்.டி.அணி செயலாளர் பாப்பண்ணா தலைமை தாங்கினார். கட்சியின் மாநில செயலாளரும், எஸ்.டி. அணியின் பொறுப்பாளருமான சதீஷ் குமார், மாநில எஸ்.டி.அணி தலைவர் சிவப்பிரகாசம், அகில இந்திய செயற்குழு உறுப்பினர் பிக்குநாத் நாயக் உள்பட பலர் பேசினர்.

பின்னர், சதீஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் பெரும்பாலான மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை. பழங்குடி மக்களுக்கு தெலங்கானா மாநிலத்தில் 10 சதவீதமும், மத்திய அரசில் ஏழரை சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஒரே ஒரு சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது.

குறைந்த பட்சம், மத்திய அரசு வழங்குவதைப்போன்று ஏழரை சதவீதம் இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து பழங்குடி மக்களுக்கும் சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி, பழங்குடி மக்களை ஒன்று திரட்டி, கட்சியின் மாநில தலைமையின் அனுமதியுடன்,அடுத்த மாதம் சென்னையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

Tags:    

Similar News